பாராகிளைடிங் சாகசத்தின் போது விபத்து: தென்கொரிய , மராட்டிய சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் பலியான சோகம்
சாக நிகிழ்ச்சிகாக செய்யும் சாகச விளையாட்டுக்கள் சில முறை விபரீதங்களாக முடியும் துயர நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
மும்பை
தென் கொரியாவைச் சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் வதோதரா பகுதியில் இவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்குள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இந்த பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் மூலம் பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக உள்ளது.
ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார் . ஷின் 50 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பராகிளைடரின் கேன்ஒபே சரியாக திறக்காதாதல், வானத்தில் இருந்து கீழே விழுந்த ஷின் பயான்ங் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இது சம்பவம் சுற்றுலா பயணிகள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய அப்பகுதி காவல்துறையினர், விபத்து குறித்து ஷின்னின் உறவினர்கள் மற்றும் கொரிய தூதரகத்திற்கு தகவல் அனுப்பினர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல மற்றொமொரு சம்பவம் மராட்டியத்தில் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சூரஜ் ஷா(30). ஹிமாசல பிரதேச மாநிலம் சுற்றுலா சென்ற இவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் பங்கேற்றார். பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனே சூரஜ் உள்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் அதிகாரி குருதேவ் கூறுகையில், விபத்தில் ஒரு சுற்றுலா பயணி பலியானார்.பலியானவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார்கள். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பாராகிளைடிங் விமானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சூரஜ் சஞ்சய் ஷா இறந்த இமாச்சல பிரதேசத்தில், டேன்டெம் பாராகிளைடிங்கின் போது பல இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன, இதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாகச விளையாட்டு நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஜனவரியில் மாநில ஐகோர்ட்டு தடை செய்யப்பட்டன. பெங்களுருவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிர் பில்லிங் பாராகிளைடிங் தளம் அருகே விபத்தில் சிக்கி இறந்ததை அடுத்து கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.