சோனாலி போகத் மரணம் வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது

சோனாலி போகத் மரண வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-29 08:10 GMT

பனாஜி:

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர்.

சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. இந்த மரணம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகஅரியானா முதல் மந்திரரி மனோகர்லால் கட்டார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தேவைப்பட்டால் சோனாலி போகத் மரண வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

பனாஜியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சாவந்த், "இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சோனாலியின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். சிபிஐயிடம் ஒப்படைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கோவா போலீசார் இந்த வழக்கை முழு ஈடுபாட்டோடு விசாரித்து வருகிறது. தேவைப்பட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்றுவோம்" என்று கூறினார்.

சொத்து தகராறு மற்றும் அரசியல் சதி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சோனாலி போகத் மரணம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது கையில் உள்ள பாட்டிலில் உள்ள மதுவை சோனாலி போகத்துக்கு வலுக்காட்டாயமாக கொடுப்பதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்