பாஜகவையும் யாராவது உடைக்கலாம் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

பாஜகவையும் யாராவது உடைக்கலாம் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-23 13:58 GMT

கொல்கத்தா,

மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த சர்ச்சையால் கடந்த 2 நாட்களாக மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மராட்டிய அரசியலில் உத்தவ் தாக்கரே அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். இன்று (பாஜக) நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள், அதனால் பணம், வலிமை, மாஃபியா பலத்தை பயன்படுத்துகிறீர்கள்.

ஆனால் ஒரு நாள் நீங்களும் ஆட்சியை விட்டு செல்ல வேண்டியது வரும். உங்கள் கட்சியையும் யாரவது உடைக்கலாம். இது தவறு, ஆனால் மராட்டிய அரசியல் நிலவரத்தை நான் ஆதரிக்கவில்லை. மராட்டிய மாநிலத்தை அடுத்து மற்ற மாநில அரசுகளையும் அவர்கள் (கிளர்ச்சி எம்எல்ஏக்கள்) கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும், அரசியலமைப்பு சட்டம் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்