தூக்க பாதிப்பு; குறிப்பு எழுதி வைத்து விட்டு நர்சிங் மாணவி தற்கொலை

ஒடிசாவில் தூக்க பாதிப்பில் தவித்த நர்சிங் பயின்ற மாணவி குறிப்பு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-09-06 11:30 GMT

புவனேஸ்வர்,



ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஜமுகோலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி நர்சிங் படித்து வந்த மாணவி குனி கன்ஹார். ஒடிசாவின் பாலாங்கீர் மாவட்ட பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில், விடுதி அறையில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் மாணவி கைப்பட எழுதி வைத்த குறிப்பு ஒன்றும் கிடைத்து உள்ளது.

அதில், தூக்க பாதிப்பினால் எனது வாழ்வை முடித்து கொள்கிறேன். எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், அதன் உண்மை தன்மை பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, குனியின் குடும்ப உறுப்பினர்களை விடுதி அதிகாரிகள் தொடர்பு கொண்டு, சில நாட்களாக குனி மனஅழுத்தமுடன் காணப்படுகிறார். அவரை வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். சில நாட்கள் உங்களுடன் வசிக்கட்டும் என கூறியுள்ளனர்.

ஒரு சில இரவுகளில் குனி தூங்காமல் விடுதியில் அலைந்து, திரிந்தபடி காணப்பட்டு உள்ளார். ஆனால், திடீரென இந்த முடிவை எடுத்துள்ளது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தேசிய குற்ற ஆவணங்கள் வாரியத்தின் அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டில் மொத்தம் 5,546 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 5,551 ஆக இருந்தது.

இது முந்தின ஆண்டை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என அறிக்கை தெரிவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்