கவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

கவர்னர் உத்தரவுக்கு எதிராக சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-08-19 07:42 GMT

பெங்களூரு,

மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார்.

இந்த நிலையில் கவர்னரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் முதல்-மந்திரி சித்தராமையா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க நீதிபதியிடம் முறையிட்டனர். அப்போது தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த மனு இன்று பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் சித்தராமையா சார்பில் ஆஜராகி வாதாடுகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்