சித்தராமையா, டி.கே.சிவக்குமார் 3-ந்தேதி முதல் தனித்தனியாக சுற்றுப்பயணம்

சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வருகிற 3-ந் தேதி முதல் தனித்தனியாக சுற்றுப்பயணம் தொடங்குகிறார்கள்.

Update: 2023-01-29 20:18 GMT

பெங்களூரு:-

சித்தராமையா பயணம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கூட்டாக மக்கள் குரல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பயணம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனித்தனியாக மக்கள் குரல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதன்படி சித்தராமையா வருகிற 3-ந் தேதி வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பீதர் மாவட்டம் பசவ கல்யாணில் பயணத்தை தொடங்கும் அவர், ஒரு சட்டசபை தொகுதி வாரியாக சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பஸ்சில் பயணத்தை மேற்கொள்ளும் அவர் 3-ந்தேதி பீதர், 4, 5, 6, 7, 8-ந் தேதிகளில் கலபுரகியில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதைத்தொடர்ந்து அன்றைய தினம் பெங்களூரு திரும்பும் அவர் மறுநாள் அதாவது 9-ந் தேதி தாவணகெரேவுக்கு செல்கிறார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், 10-ந் தேதி மீண்டும் கலபுரகிக்கு செல்கிறார். 11, 12-ந் தேதிகளில் விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 13-ந் தேதி மீண்டும் அவர் பெங்களூரு வந்து, சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

தனித்தனி குழுக்கள்

அதேபோல் டி.கே.சிவக்குமாரும் அதே நாளில் தென் கர்நாடகத்தில் இருந்து தனது மக்கள் குரல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 2 பேரின் பயணத்தை ஒருங்கிணைக்க தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்