மாநில எரிசக்தி நிறுவனங்களுடன் மத்திய மந்திரி ஆர்.கே.சிங் தலைமையில் திட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம்

மத்திய எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே. சிங் தலைமையில் மாநில எரிசக்தி நிறுவனங்களுடன் திட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-06 09:33 GMT

புதுடெல்லி,

மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே. சிங் தலைமையில் தலைநகர் புதுடெல்லியில் மாநிலங்கள் மற்றும் மாநில எரிசக்தி நிறுவனங்களுடன் திட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய எரிசக்தி மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார், எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளின் செயலாளர்கள், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி 'ஒளிமிகு இந்தியா ஒளிமையான எதிர்காலம்' திட்டக் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது பிரதமர் தெரிவித்த கருத்துக்கிணங்க, துறை சார்ந்த நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை, எரிசக்தித் துறையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசுத் துறைகளில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் அளவீட்டில் முன்னேற்றம்; எரிசக்தி கணக்கியல், மானிய கணக்கியல், உரிய நேரத்தில், முன்கூட்டியே பணம் செலுத்துதல் ஆகியவற்றின் வலுவான அமைப்புமுறைகளை நிறுவுதல்; வழக்கமான மற்றும் சரியான கட்டணங்களை தக்க நேரத்தில் நிர்ணயித்தல்; நிறுவனங்களின் கணக்குகளை உரிய காலத்தில் இறுதி செய்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த கூட்டத்தின் போது எரிசக்தி விநியோக நிறுவனங்களின் 10-வது ஒருங்கிணைந்த தரவரிசை, எரிசக்தி விநியோக நிறுவனங்களின் முதலாவது நுகர்வோர் சேவை தரவரிசை மற்றும் பாரத் இ-ஸ்மார்ட் செல்பேசி செயலி ஆகியவற்றை மந்திரி ஆர்.கே.சிங் அறிமுகப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்