இளம்பெண் கொலை, உடலுடன் பாலியல் உறவு... வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு திடுக் தகவல்

இளம்பெண் கொலைக்கு பின் உடலுடன் பாலியல் உறவு கொண்ட வழக்கில், குற்றவாளியை விடுவித்த கர்நாடக ஐகோர்ட்டு மற்றொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

Update: 2023-06-04 10:04 GMT

பெங்களூரு,

கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு 21 வயது இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் இறந்த அவரது உடலுடன் குற்றவாளி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் நடந்த வழக்கு விசாரணையில், செசன்ஸ் கோர்ட்டு குற்றவாளிக்கு கொலை மற்றும் பலாத்கார குற்றச்சாட்டுகளின் கீழ் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக, கர்நாடக ஐகோர்ட்டில் குற்றவாளி மேல்முறையீடு செய்து உள்ளார்.

இதனை நீதிபதி விசாரணை மேற்கொண்டு, இரண்டு குற்றங்களுக்கான தீர்ப்பை உறுதி செய்து உள்ளார். இதன்பின்னர், டிவிஷன் பெஞ்சில் குற்றவாளி மேல்முறையீடு செய்து உள்ளார். அதில், கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து அந்நபரை விடுவித்தது. அந்த நபர் இறந்த உடலுடன் உறவு கொண்டது இந்திய தண்டனை சட்டத்தின் எந்த பிரிவின் கீழும் குற்றச்செயல் ஆகாது என தெரிவித்தது.

கோர்ட்டின் இந்த உத்தரவால், இறந்த மனித உடலின் கண்ணியத்திற்கான உரிமை பற்றிய விவாதத்தில் சூடு கிளப்பி உள்ளது. இது ஒருபுறமிருக்க, கர்நாடக ஐகோர்ட்டானது, நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியான விசயங்களை வெளிப்படுத்தி உள்ளது.

ஐகோர்ட்டு வெளியிட்ட தகவலில், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பிணவறையில் வைக்கப்பட்டு இருக்கும் இறந்த உடல்களில், குறிப்பிடும்படியாக இளம்பெண் உடல்களுடன், அவற்றை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஊழியர் பாலியர் உறவை வைத்து கொள்கிறார் என்ற தகவல் எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தெரிவித்தது.

இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் மாநில அரசு உறுதி செய்ய வேண்டிய உரிய தருணம் ஏற்பட்டு உள்ளது. இறந்த பெண்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்