'சி-விஜில்' செயலில் கன்னட மொழி இல்லாததால் அதிர்ச்சி

‘சி-விஜில்’ செயலில் கன்னட மொழி இல்லாததால் அதிர்ச்சி.

Update: 2023-04-08 18:45 GMT

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முறைகேடுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் 'சி-விஜில்' (cVIGIL) என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் அல்லது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பான முறைகேடு குறித்து வீடியோ அல்லது புகைப்படத்தை பதிவு செய்து புகார் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த செயலில் கன்னட மொழி இல்லை. அதில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட 7 மொழிகள் மட்டும் உள்ளது. அந்த மொழி மக்கள் தங்கள் மொழியை தேர்ந்தெடுத்து புகார்களை பதிவு செய்யலாம். ஆனால் கன்னட மொழி அதில் சேர்க்கப்படவில்லை. இதனால் கர்நாடக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் நடந்தாலும் கன்னட மொழியில் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னட மொழி இல்லாதபோது சாமானிய மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து எவ்வாறு புகார் அளிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்