அக்காள் கணவரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது

மூடபித்ரி தாலுகாவில் அக்காள் கணவரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-11 18:45 GMT

மங்களூரு-

மூடபித்ரி தாலுகாவில் அக்காள் கணவரை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா கந்தல்கட்டே பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமால் (வயது40). இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு சிக்கமளூருவை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவரது சகோதரர் சுகேப்(34). இந்தநிலையில் தம்பதியினர் கந்தல்கட்டே பகுதியில் வசித்து வந்தனர். சுகேப் தனது சகோதரியை பார்ப்பதற்காக சிக்கமகளூருவுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது சுகேப், முகமது இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சுகேப் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சகோதரி வீட்டில் இல்லை. இந்தநிலையில் வீட்டில் அக்காள் கணவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது சுகேப், முகமது ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுகேப் அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் அவர் சிறிது நேரம் கழித்து சகோதரி வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார். அப்போதும் அவர்கள் இடையே வாக்குவாதம் எற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுகேப் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமதுவை வயிற்று பகுதியில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் சரிந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வாலிபர் கைது

ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முகமது பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூடபித்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுகேப்பை தேடி வந்தனர். இந்தநிலையில் சிக்கமகளூருவில் சுகேப் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்போில் அங்கு சென்று சுகேப்பை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள் கணவரை வாலிபர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்