ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு ஆர்வம் இல்லை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு ஆர்வம் இல்லை என கூறப்படுகிறது.

Update: 2022-06-14 11:51 GMT

மும்பை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது. அதன்படி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க பா.ஜ.க-வும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மராட்டிய தேசிய வாத மந்திரிகளை அமைச்சர்களை பவார் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மந்திரி ஒருவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், ஞாயிற்றுக்கிழமை பவாரைச் சந்தித்து, ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் என்சிபி தலைவருக்கு தனது கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.

"ஆனால், அவர் அதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. பவார் மக்களைச் சந்திப்பதை விரும்பும் ஒரு மக்கள் மனிதர். அவர் ஜனாதிபதி மாளிகையில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்," என்று கூறினார்.

பவார் டெல்லியில் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரபுல் படேல் மற்றும் பி சி சாக்கோ ஆகியோரை சந்தித்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தனது முடிவை அவர்களிடம் தெரிவித்தார்.

பவார் தனது அரசியல் வாழ்க்கையில் இந்த கட்டத்தில் தோற்க வேண்டிய ஒரு போரில் நுழைய விரும்பவில்லை என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மிக முக்கியமாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பவார் மும்முரமாக இருக்கிறார்.

அதேபோல் நிதிஷ் குமார் ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவர், அதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி போட்டியில் நான் இல்லை. நான் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடப்போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. இது போன்ற தகவல்கள் ஆதாரமற்றவை, வெறும் ஊகங்கள்தான்'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்