நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு?

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.;

Update: 2024-06-04 09:54 GMT

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். பா.ஜனதா கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

எனினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சரத்பவார் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் எனக் கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்