பேராசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; பேராசிரியரை சஸ்பெண்டு செய்த டெல்லி பல்கலை கழகம்

3 பேராசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கல்லூரி இணை பேராசிரியரை டெல்லி பல்கலை கழகம் சஸ்பெண்டு செய்ய ஒப்புதல் அளித்து உள்ளது.

Update: 2022-07-14 17:06 GMT



புதுடெல்லி,



டெல்லி பல்கலை கழகத்திற்கு உட்பட்ட தொழில்முறை படிப்புகளுக்கான கல்லூரியில் (சி.வி.எஸ்.) இணை பேராசிரியராக பணியாற்றுபவர் மன்மோகன் பாசின்.

இவர் மீது பேராசிரியைகள் பலர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் அவரை சஸ்பெண்டு செய்ய டெல்லி பல்கலை கழகத்தின் துணைவேந்தர் யோகேஷ் சிங் ஒப்புதல் அளித்து உள்ளார்.

எனினும், அதுபற்றிய கடிதம் எதுவும் வரவில்லை என பாசின் கூறியுள்ளார். அதனால், இதுபற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த புகாரை கூறியவர்களில் ஒருவர் ராம்ஜாஸ் கல்லூரியை சேர்ந்த பேராசிரியை. மற்ற 2 பேர் சி.வி.எஸ். கல்லூரியை சேர்ந்தவர்கள். மொத்தம் 3 பேர் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அளித்துள்ளனர்.

பாசின் மீது பல பாலியல் துன்புறுத்தல் புகார்கள் உள்ளன என இணை பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணையின்போது, அதிலும் பாசின் தலையிட்டதுடன், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடனும் தகாத மற்றும் தவறாக நடக்க பாசின் முயன்றுள்ளார்.

இதனால், ஆட்சிமன்ற குழு அவரை சஸ்பெண்டு செய்ய முடிவு செய்துள்ளது என பெயர் வெளியிட விருப்பமில்லாத இணை பேராசிரியர் கூறியுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை கல்லூரியில் எந்தவொரு நிர்வாக பொறுப்பிலும் இருக்க கூடாது என கூறி பாசினுக்கு கல்லூரியின் ஆட்சிமன்ற குழு தடை விதித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்