இன்ஸ்டா மூலம் பழகி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை : வாலிபர் கைது
மாணவிகளை தனிமையில் சந்தித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல் தோட்டத்து வீட்டை சேர்ந்தவர் நீரஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் இன்ஸ்டாகிரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். பின்னர் அந்த மாணவிகளை தனிமையில் சந்தித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி வெளியே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சமீபத்தில் அவர் இதுபோல மாணவி ஒருவரை வெளியே அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த போது அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் நீரஜை பிடித்து விசாரித்த போது அவர் இதுபோல பல மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து நீரஜை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.