எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏழு தொழிலாளர்கள் பலி
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர பயங்கர விபத்து நடந்துள்ளது.
காக்கிநாடா
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்ட பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் உள்ள அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இங்கு எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தொழிலாளர்கள் தவறி விழுந்ததாகவும், மேலும் சில தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. காலை ஏழு மணியளவில் இந்த் விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் மேலும் சில தொழிலாளர்கள் காயம் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் 2 பேர் பெத்தபுரம் மண்டலத்தைச் சேர்ந்த புலிவேறு மற்றும் 5 பேர் படேருவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இறந்தவர்களின் விவரம் வருமாறு:-
1) மோச்சாங்கி கிருஷ்ணா படேரு
2) மொச்சாங்கி நரசிங்க, படேரு
3) மொச்சாங்கி சாகர், படேரு
4) குறதாடு பஞ்சு பாபு
5) குர்ரா ராமராவ், படேரு
6) கட்டமுரி ஜெகதீஷ், புலிவேறு
7) பிரசாத் புலிவேறு