மைசூரு-பெங்களூரு உள்பட 8 ரெயில்களின் சேவை ரத்து

தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மைசூரு-பெங்களூரு உள்பட 8 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-08-04 15:18 GMT

மைசூரு;

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்தது. தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக கடலோரம் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழைக்கு மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் மழைவெள்ளம் புகுந்துள்ளது. இதனால் சேறு, சகதியுமாக மாறி தண்டவாளமே வெளியே தெரியாதபடி உள்ளது.

இதனையறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மைசூரு-பெங்களூரு உள்பட 8 ரெயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது. அதாவது மைசூரு-பெங்களூரு மற்றும் மைசூரு வழியாக பெங்களூரு செல்லும் ரெயில்கள் என 8 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திடீரென ரயில் சேவையை ரத்து செய்ததால் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்