மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் இலவசமாக வழங்குகிறது.

Update: 2022-12-29 03:19 GMT

புதுடெல்லி,

சீனா மற்றும் தென் கொரியா உட்பட சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.

இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இரண்டு கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், ரூ. 410 கோடி மதிப்பிலான தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்குவதாக சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இதுவரை 170 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டுகளை தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்