ரூ.2½ கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பறிமுதல்

பெலகாவியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2½ கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-05 20:53 GMT

பெலகாவி:

பெலகாவியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2½ கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலத்தில் பல பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பெலகாவியில் ரூ.2.53 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம்-வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் பின்வருமாறு:-

ரூ.2 கோடி ரொக்கம்

பெலகாவி மாவட்டம் ஹிரேபாகேவாடி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது மும்பையில் இருந்து மங்களூரு நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு நபரின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதுதொடர்பாக அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.

ஆனால் அவரிடம் பணத்துக்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அந்த நபரை கைது செய்த அதிகாரிகள், ரூ.2 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது. இருபற்றிய தகவல் அறிந்ததும் பெலகாவி மாவட்ட கலெக்டர் நித்தேஷ் பட்டீல், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பார்வையிட்டார்.

ரூ.53 லட்சம்

பெலகாவி மாவட்டம் கானாப்பூர் அருகே நந்தகாட் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஹலியால் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை இருந்தன. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், ரூ.21.25 லட்சம் மதிப்பிலான 395 கிராம் தங்கம், ரூ.19.08 லட்சம் மதிப்பிலான 28 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் பெலகாவியில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்