அயோத்தியில் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்திய பாதுகாப்பு படையினர்

அயோத்தியில் பாதுகாப்பு படையினர் தேசிய கொடி ஏந்தி பேரணியாக சென்றனர்.

Update: 2024-08-15 16:16 GMT

லக்னோ,

இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாதுகாப்பு படையினர் தேசிய கொடி ஏந்தி பேரணியாக சென்றனர். இது குறித்து அயோத்தி எஸ்.பி. ராஜ் கரண் நய்யார் கூறுகையில், "இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப்., பி.எஸ்.சி., ஏ.டி.எஸ்., கமாண்டோ படையினர் மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து அயோத்தி ராமஜென்ம பூமியில் தேசிய கொடி ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

இந்த பேரணியானது சுக்ரீவ் கிலா பகுதியில் இருந்து லதா மங்கேஷ்கர் சவுக் பகுதி வரை நடைபெற்றது. காவல்துறையைச் சேர்ந்த இசைக்குழுவினர் லதா மங்கேஷ்கர் சவுக் பகுதியில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்த பேரணியில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்