புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு - பலூன் கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்..!

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Update: 2022-06-23 11:58 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்தனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

அப்போது திருநள்ளாறில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வருகை தந்த மாணவர்களுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஷாலினி தனது இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தும், மலர் தூவியும், வண்ண வண்ண பலூன்கள் வழங்கியும், எழுது பொருள்கள் கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை முடிக்கப்பட்டு, ஜூலை 11-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்