புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது தமிழுக்கு கிடைத்த மகுடம்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டது தமிழுக்கு கிடைத்த மகுடம் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2023-05-28 05:17 GMT

புதுச்சேரி,

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஆதினங்களிடம் இருந்து பெற்ற செங்கோலைபுதிய நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று பிரதமர் மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டது தமிழுக்கு கிடைத்த மகுடம் என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் நீதி வழுவாத செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் கூறியுள்ள அவர், நாடாளுமன்ற திறப்புவிழாவை புறக்கணித்தவர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு வரலாற்று பிழையை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்