எஸ்.சி., எஸ்.டி. மக்களை பாதுகாக்கவே கூடுதல் இடஒதுக்கீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

எஸ்.சி., எஸ்.டி. மக்களை பாதுகாக்கவே கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தெரிவித்தார்.

Update: 2022-10-08 18:45 GMT

பெங்களூரு:

பசவராஜ்பொம்மை பேட்டி

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் அறிக்கையின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்களை பாதுகாக்கவே இந்த கூடுதல்

இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்து உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடகம் தாண்டி உள்ளது.

மத்திய அரசும் உதவி

இதுவரை 57 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் விதிகள் பற்றி சட்ட மந்திரி மாதுசாமி, சட்ட கமிஷன், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உள்ளேன். நாகமோகன்தாஸ் தனது அறிக்கையில் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் கல்வியில் முன்னேற கூடுதல் இடஒதுக்கீடு அவசியம் என்று கூறி இருந்தார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கர்நாடக எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசும் சில உதவிகளை செய்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்