பாடப் புத்தகங்களில் தாஜ்மஹால் தொடர்பான தவறான வரலாற்று தகவல்களை நீக்க கோரிய மனு தள்ளுபடி!

தாஜ்மஹால் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2022-12-06 03:31 GMT

புதுடெல்லி,

தாஜ்மஹால் குறித்து பாடப்புத்தகங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சுர்ஜித்சிங் யாதவ் என்பவர் தொடர்ந்த பொதுநல மனு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில் முகலாய மன்னர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்பட்டது தொடர்பான தவறான வரலாற்று உண்மைகள் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், தாஜ்மஹால் குறித்து பாடப்புத்தகங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் தாஜ்மஹால் குறித்த தகவல்கள் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், வரலாற்றை தெரிந்துகொண்டு மாற்ற வேண்டியது தங்களது வேலை இல்லை, மனுதாரர் தேவைப்பட்டால் இந்திய தொல்லியல் துறையை அணுகலாம் என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்