தத்தா கோவிலில் மந்திரி சுனில்குமார் குடும்பத்துடன் சாமி தரிசனம்
தத்தா கோவிலில் மந்திரி சுனில் குமார் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு சந்திர திரிகோண மலையில் தத்தா கோவிலில் தத்தா ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், தனது குடும்பத்துடன் தத்தா பீடத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். காவி துண்டு அணிந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தத்தா கோவிலை நிர்வகிக்க அரசு 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தற் போது அந்த குழுவினர் தத்தா கோவிலில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்களை நியமித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. பல ஆண்டுகள் கழித்து அர்ச்சகர்களை நியமித்து பூஜை செய்து, அவர்கள் மூலம் பிரசாரம் வாங்கி சாப்பிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.