திருப்பதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம்
அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தார். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரெங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.