ரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-04-11 20:56 GMT

பெங்களூரு:

ரோகிணி சிந்தூரி குறித்து பேச ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெண் அதிகாரிகள்

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு உயர் பெண் அதிகாரிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. இதேபோல் போலீஸ் துறை உயர் அதிகாரியாக இருப்பவர் ரூபா. இந்த நிலையில் ரோகிணி சிந்தூரி, சக அதிகாரிகளுக்கு தனது ஆபாச புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாக ரூபா குற்றச்சாட்டு கூறினார். இது அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஒருவர் மீது ஒருவர், சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் பொதுஇடங்களில் பேசுவதற்கும் தடை விதித்தது. தன்னை குறித்து பேசுவதற்கு தடை விதிக்க கோரி, ரோகிணி சிந்தூரி சார்பில் பெங்களூரு சிட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரோகிணி சிந்தூரி குறித்து பேசுவதற்கு தடை விதித்து ரூபாவுக்கு உத்தரவிட்டார். சிட்டி கோர்ட்டு உத்தரவை எதிர்த்து, ரூபா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தடை நீக்கம்

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நீதிபதி சீனிவாசா ஹரிஷ் குமார் அமர்வில், ரூபாவின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.

பின்னர் நீதிபதி பேசுகையில், ரோகிணி சிந்தூரி குறித்து பேசுவதற்கு தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அதுதொடர்பான உத்தரவு ஒன்று வெளியிடப்படவில்லை என கூறுப்படுகிறது. எனவே ரோகிணி சிந்தூரி குறித்து ரூபா பேசுவதற்கு தடை விதித்த சிட்டி கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்