ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சந்திரசேகர் பண்டாரி மரணம்

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சந்திரசேகர் பண்டாரி மரணம் அடைந்தார்.

Update: 2022-10-30 21:41 GMT

பெங்களூரு: பெங்களூரு பனசங்கரி பகுதியில் வசித்து வந்தவர் சந்திரசேகர் பண்டாரி. இவர் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ஆவார். 87 வயதான இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மற்றும் இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் இன்று(திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன்பிறகு காலை 10 மணிக்கு பனசங்கரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்