திருமணம் செய்ய மறுத்ததுடன் ரூ.4 லட்சம் மோசடி; தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
என்.ஆர்.புரா அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததுடன் ரூ.4 லட்சம் மோசடி செய்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். தலைமறைவான காதலியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
திருமணம் செய்வதாக...
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்(வயது 26). இவர், அதே பகுதியில் வாடகை கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சேத்தனும்,அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இளம்பெண், சேத்தனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் அவாிடம் இருந்து ரூ.4 லட்சம் வரை வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து இளம்பெண், சேத்தனிடம் வேறு சாதி என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தனக்கு வேெறாரு
வருடன் திருமணம் நடக்க உள்ளதாகவும், அதனால் காதலை கைவிடும்படி கூறியதாக கூறப்படுகிறது. ஆனாலும் சேத்தன் திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சேத்தனிடம் வாங்கிய ரூ.4 லட்சத்தையும் திருப்பி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் சேத்தன் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு சேத்தன் தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், என்.ஆர்.புரா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்போில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்த சேத்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம் சிக்கியது
மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு சேத்தன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது தற்கொலைக்கு காதலி தான் காரணம் என்றும், காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே விஷயம் அறிந்து இளம்பெண் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளம்பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.