ரூ.200 கோடி பணம் பறித்த விவகாரம்: வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் மனு

ரூ.200 கோடி பணம் பறித்த விவகாரம் தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் மனு அளித்துள்ளார்.

Update: 2023-04-10 21:24 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடி வழக்குகளுக்காக டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல தொழிலதிபரின் மனைவியிடம் சிறையில் இருந்தபடியே மத்திய அரசு அதிகாரிபோல் பேசி, ரூ.200 கோடி பறித்ததாக மற்றொரு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் அவரும், அவருடைய மனைவி லீனா மரியா பாலும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி விசாரித்து வருகிறார். அவர் தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், எனவே, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறும் கோரி, முதன்மை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி தர்மேஷ் சர்மா முன்பு சுகேஷ் சந்திரசேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதிலை, 17-ந் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தர்மேஷ் சர்மா உத்தரவிட்டார். மேலும், 17-ந் தேதி, சுகேஷை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்