சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்
சொகுசு கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சொகுசுகார் நின்றுகொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த நபர் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தார். காருக்குள் பையில் இருந்த 13 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் தனது கூட்டாளியுடன் பைக்கில் ஏறி சென்றார்.
பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து 13 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது தொடர்பாக உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.