சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் - கர்நாடக போக்குவரத்து போலீசார் அதிரடி உத்தரவு

காரில் பின் இருக்கையில் இருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவில்லையென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-10-20 15:03 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.விபத்தின் போது சீட் பெல்ட் அணிந்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என கூறப்பட்டது.

அந்த சம்பவத்தை தொடர்ந்து காரின் பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் சீல்பெல்ட் அணிந்திருக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய சாலை போக்குவரத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

அதன்படிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பை கர்நாடக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்றும், சீட் பெல்ட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும், நாளொன்றுக்கு 31 பேர் என7 ஆயிரத்து 634 பேர் சாலை விபத்துகளால் இறந்துள்ளதை போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்