ரிஷி சுனக்கிற்கு மாமனாரான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ரிஷி சுனக்கிற்கு இன்போசிஸ் நிறுவனர் மற்றும் சுனக்கின் மாமனாரான என்.ஆர். நாராயண மூர்த்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2022-10-25 04:39 GMT



புதுடெல்லி,


இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அவர், 42 வயதில் இங்கிலாந்தின் இளம்பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில், நிதி மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த பதவியை அலங்கரிக்கிறார். ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, இன்போசிஸ் நிறுவனர் மற்றும் ரிஷி சுனக்கின் மாமனாரான என்.ஆர். நாராயண மூர்த்தி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரிஷிக்கு வாழ்த்துகள்.

அவரால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் வெற்றியடைய வாழ்த்துகிறோம். இங்கிலாந்து மக்களுக்கு தன்னாலான சிறந்த விசயங்களை அவர் செய்வார் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்