கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

கட்டாயக்கல்வி உரிமை சட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2023-02-13 19:49 GMT

புதுடெல்லி,

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை உரிய காலத்துக்குள் அமல்படுத்துவதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பீகாரைச்சேர்ந்த இம்ரான் அகமது தாக்கல் செய்த பொதுநல மனுவில், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் (12) (1) (சி) பிரிவை உரிய காலத்துக்குள் அமல்படுத்துவதை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்தப் பொதுநல மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு அது தொடர்பாக பதில் அளிக்க, மத்திய அரசு, அருணாசலப்பிரதேசம், கோவா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, மேற்குவங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லடாக், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்