5வது முறையாக ரெப்போ வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி - தனி நபர் கடன் உயர வாய்ப்பு!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளீயிட்டு உள்ளது.
புதுடெல்லி,
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு உள்ளது
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி ரெப்போ வட்டி 0.35 சதவீதம் அதிகரிக்கபட்டு உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் காரணமாக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) ஒரே ஆண்டில் 5 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பணவீக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ ரேட் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்து 6.25 ஆக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வங்கிக்கடன் பெரும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய வீடு,வாகனம், தனிநபர் கடனுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதாவது வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் அந்த வங்கிகள் கூடுதல் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.