ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ராஜேஸ்வர் ராவ் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ராஜேஸ்வர் ராவ் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-26 15:47 GMT

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.ராஜேஸ்வர ராவின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த 2020 அக்டோபரில் மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அக்டோபர் 9, 2023 முதல் மேலும் ஒரு வருட காலத்திற்கு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக எம் ராஜேஷ்வர் ராவ் தொடர அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்