திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது

பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

Update: 2023-02-12 19:29 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமவர்மபுரம் போலீஸ் முகாமில் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீராஜ் (வயது 36) என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் காசர்கோட்டை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணுடன் ஸ்ரீராஜ் அடிக்கடி பேசி வந்து உள்ளார். மேலும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண், அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்து உள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் ஸ்ரீராஜ் நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதை நம்பிய அந்தப்பெண் அங்கு சென்று உள்ளார். மேலும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்தநிலையில் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்து உள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்