மாநிலங்களவை தேர்தல் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.;

Update:2023-07-10 14:30 IST

அகமதாபாத்,

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபிறகு பிரதமர் மோடி, பாஜக தலைமை மற்றும் குஜராத் மக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ஜெய்சங்கர் நன்றியைத் தெரிவித்தார்.

கடந்த 2019ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தேர்வானார். குஜராத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூலை 24ம் தேதி நடக்கிறது.

குஜராத்தில் உள்ள 11 ராஜ்யசபா தொகுதிகளில், தற்போது 8 பாஜக வசம் உள்ளது. மீதமுள்ள 3 இடங்கள் காங்கிரஸ் வசம் உள்ளது. பாஜக வசம் உள்ள எட்டு இடங்களில், ஜெய்சங்கர், ஜுகல்ஜி தாக்கூர் மற்றும் தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18, 2023 அன்று முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்