மாநிலங்களவை தோ்தல்: 41 போ் போட்டியின்றி தோ்வு; 16 இடங்களுக்கான வாக்குப்பதிவு ஜூன் 10ம் தேதி நடைபெறும்

மாநிலங்களவை தோ்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Update: 2022-06-05 03:07 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவை தேர்தலை பொறுத்தவரை எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராஜ்யசபா சீட்களின் எண்ணிக்கை மாறுபடும்.

மாநிலங்களவைத் தோ்தலில் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 41 உறுப்பினர்கள் கட்சி வாரியாக:- பாஜக - 14, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - 4, திமுக, பிஜு ஜனதா தளம் - 3, ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி, டி.ஆர்.எஸ், அதிமுக - 2, ஜே.எம்.எம், ஜே.டி.யு, சமாஜ்வாதி, ஆர்.எல்.டி - 1 மற்றும் சுயேச்சை - 1.

மீதமிருக்கும் 16 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா ஆகிய 4 மாநிலங்களில் அங்கிருக்கும் ராஜ்யசபா சீட்களை விட கூடுதலாக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வரும் 10ம் தேதியன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இருந்து 6 பேர், ராஜஸ்தான், கர்நாடகாவில் இருந்து தலா 4 பேர், அரியானாவில் இருந்து 2 பேர் என மொத்தம் 16 பேர் மாநிலங்களவைக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்