கூடுதல் தலைமை செயலாளராக ரஜனீஷ் கோயல் நியமனம்
கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஜனீஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு:-
கூடுதல் தலைமை செயலாளர்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இதையடுத்து, அரசின் நிர்வாக வசதிக்காக கடந்த பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரி அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், முதல்-மந்திரி அலுவலகத்திற்கு புதிய அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
குறிப்பாக கடந்த பா.ஜனதா ஆட்சியில் உள்துறை முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஜனீஷ் கோயல், கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். நகராட்சி துணை இணை கமிஷனராக இருந்த சிவசாமி, முதல்-மந்திரியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல்-மந்திரி சிறப்பு அதிகாரி
இதுபோல், கே.ஏ.எஸ்.அதிகாரியான வெங்கடேசப்பா, முதல்-மந்திரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சித்தராமையா இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்த போது சிறப்பு அதிகாரியாக இருந்த வெங்கடேஷ், தற்போதும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியை தொடர உள்ளார்.
கடந்த முறை சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது ஊடகஆலோசகராக கே.வி.பிரபாகர் இருந்தார். தற்போதும் அவரை, முதல்-மந்திரிசித்தராமையாவின்ஊடக ஆலோசகராக அரசு நியமித்திருக்கிறது. இதுபோல், முதல்-மந்திரி அலுவலகத்தில் பணியாற்றுவதற்காகஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.