பாதுகாப்பு விவகாரம்... இங்கிலாந்து செல்லும் ராஜ்நாத் சிங்... ரிஷி சுனக் உடன் சந்திப்பு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் இரு தரப்பு உறவு மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2024-01-08 03:34 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தும் ராஜ்நாத் சிங் லண்டனில் உள்ள மாகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்ல திட்டமிட்ட நிலையில் நெறிமுறை காரணங்களுக்காக இந்திய தரப்பால் அந்த பயணம் நிறுத்தப்பட்டது. எனவே ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 22 ஆண்டுகளில் இந்திய ராணுவ மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்