நுபுர் சர்மாவை ஆதரித்ததற்காக சக ஊழியரின் தலையை துண்டிப்பதாக மிரட்டிய நபர் கைது

மகேந்திர சிங் அளித்த புகாரின் பெயரில் சோஹைல் கான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-08 07:15 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக பல மாநிலங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் எதிரொலித்தது. முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

இந்த நிலையில் ராஜஸ்தானில் நுபுர் சர்மாவை ஆதரித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வெளியிட்டதற்காக சக ஊழியரின் தலையை துண்டித்து விடுவதாக மிரட்டிய நபரை ஜோத்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர். புகார்தாரரான மகேந்திர சிங் ராஜ்புரோஹித் ஜூன் 6 ஆம் தேதி நுபுர் சர்மாவை ஆதரித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த சக ஊழியரும் வழக்கறிஞரின் எழுத்தரும் ஆன சோஹைல் கான், மகேந்திர சிங் ராஜ்புரோஹித்தின் தலையை துண்டிப்பதாக மிரட்டியுள்ளார். 

இது குறித்து மகேந்திர சிங் அளித்த புகாரின் பெயரில் சோஹைல் கான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்