இன்று தேர்வாகிறார் ராஜஸ்தான் முதல்-மந்திரி..!!

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

Update: 2023-12-11 23:00 GMT

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்,

கடந்த நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏனைய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இந்த சூழலில் ராஜஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் இன்னமும் முதல்-மந்திரி யார்? என்று பா.ஜனதா அறிவிக்காமல் உள்ளது.

இதற்கிடையே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், சரோஜ் பாண்டே, வினோத் தாவ்டே ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் மத்திய மந்திரிகள் அர்ஜூன்ராம் மேக்வால், கஜேந்திரசிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் முதல்-மந்திரி தேர்வு பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்