கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் பட்னாவிஸ் - ராஜ் தாக்கரே

கட்சி விசுவாசத்திற்கு சிறந்த உதாரணம் தேவேந்திர பட்னாவிஸ் என ராஜ் தாக்கரே பாராட்டி உள்ளார்.

Update: 2022-07-02 22:53 GMT

துணை முதல்-மந்திரி பதவி

மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். ஆனால் அவருக்கு கட்சி மேலிடம் முதல்-மந்திரி பதவியை வழங்காமல், சிவசேனா அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கியது. எனினும் அவர் கட்சி தலைமைக்கு கட்டுபட்டு துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிசை, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே புகழ்ந்து உள்ளார்.

விசுவாசத்திற்கு உதாரணம்

இதுகுறித்து அவர் வெளியிட்ட கடிதத்தில், " நீங்கள் முதல்-மந்திரியாக 5 ஆண்டு இருந்தவர். இந்த அரசாங்கத்தை அமைக்க மிகப்பெரிய முயற்சிகளை செய்தவர். ஆனாலும் கட்சி சொன்னதற்காக துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டு உள்ளீர்கள்.

உங்களின் செயல் தனிநபரை விட கட்சி பெரியது என்பதை காட்டுகிறது. ஒருவர் கட்சிக்கு எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது. மற்ற கட்சிகளில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் இதை கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் " என கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்