பெங்களூருவில் பலத்த மழை
பெங்களூருவில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் கேட் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் கேட் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை மக்களை குளிர்விப்பதாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஓசூர் கேட் பகுதியில் மெட்ரோ நிலையத்தின் கீழ் மழைநீர் தேங்கியது. மேலும் அந்த பகுதியில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து வந்த அரசு பஸ்கள் உள்ளிட்டவை அந்த பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்து நகருக்குள் வந்தன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் பெங்களூருவில் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைநீர் தேங்குவதால் சுமார் 4 நேரம் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.