கர்நாடகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

மாண்டஸ் புயல் காரணமாக பெங்களூருவில் ௪ நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-08 21:50 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிதாக 'மாண்டஸ்' என்ற புயல் உருவாகி உள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் புயல் காரணமாக 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'மாண்டஸ்' புயல் எதிரொலியாக கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பெங்களூரு, பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், கோலார், மைசூரு, துமகூரு ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, பாகல்கோட்டை, கலபுரகி, ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், வருகிற 17-ந் தேதி பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், குடகு, கோலார், மைசூரு, சிக்கமகளூரு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்