ஒரே மாதத்தில் 895 குழந்தைகளை மீட்ட ரெயில்வே போலீசார்

ஒரே மாதத்தில் 895 குழந்தைகள் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டனர்.

Update: 2023-10-18 18:59 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ரெயில் நிலையங்களில் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகள், குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதில் ரெயில்வே போலீசார் தீவிர பணியாற்றி வருகிறார்கள். இதில் குழந்தைகளை காக்கும் நன்ஹே பரிஸ்தே நடவடிக்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 322 சிறுமிகள் உள்பட 895 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். இதைப்போல ஆட்கடத்தலில் ஈடுபட்ட 14 பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களது பிடியில் இருந்து 29 பேர் மீட்கப்பட்டனர்.

ஜீவன் ரக்சா என்கிற உயிர்காப்பு நடவடிக்கையில் கடந்த மாதம் 265 பயணிகளின் உயிரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர். ரெயில்கள் மோதவிருந்த கடைசி நேரத்தில் அவர்கள் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்