மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்

ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ளது.

Update: 2024-01-27 16:16 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரி 14ம் தேதியன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடைபயணமானது மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.

இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி 2 நாள் ஓய்வுக்கு பிறகு இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ளது . நாளைய யாத்திரை மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் துவங்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்