பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ராகுல் காந்தி நன்றி
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்திக்கு டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், 'வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு பலம் தருகிறது.' என பதிவிட்டுள்ளார்.