விஞ்ஞானிகளின் புகைப்பட வரிசையில் இடம்பெற்ற "பிரேக்கிங் பேட்" கதாபாத்திரம்- வைரலாகும் வீடியோ

பிரேக்கிங் பேட் தொடரின் நாயகனாக "வால்டர் ஒயிட்" என்ற கதாபாத்திரத்தில் பிரையன் கிரான்ஸ்டன் நடித்திருப்பார்.

Update: 2022-08-10 16:55 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் விஞ்ஞானிகளின் புகைப்பட வரிசையில் பிரபல வெப்சீரிஸ் தொடரான "பிரேக்கிங் பேட்" கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் பிரபல வெப்சீரிஸ் தொடர் "பிரேக்கிங் பேட்". இந்த தொடரின் நாயகனாக "வால்டர் ஒயிட்" என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரையன் கிரான்ஸ்டன் நடித்திருப்பார்.

விஞ்ஞானி கதாபாத்திரமாக அந்த தொடரில் பிரையன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரசிகர்கள் மத்தியில் இன்றும் இந்த கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நிலையில் பஞ்சாபில் பள்ளிக்குள், நிகோலா டெஸ்லா மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபல விஞ்ஞானிகளின் புகைப்படங்களில் வால்டர் ஒயிட்டின் உருவப்படமும் ஒன்றாக அமைந்து இருக்கிறது.



குவாண்டம் இயக்கவியல் கோட்பாட்டின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான விஞ்ஞானி வெர்னர் ஹைசன்பெர்க்கிற்குப் பதிலாக பிரேக்கிங் பேட் நடிகரான பிரையன் க்ரான்ஸ்டனின் புகைப்படம் தவறுதலாக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்