பஞ்சாப் மந்திரிசபை இன்று விரிவாக்கம்: மேலும் 5 பேருக்கு மந்திரி பதவி
பஞ்சாப் மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் 5 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.;
Image Corutacy: PTI
சண்டிகார்,
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மன் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் அவர் உள்பட 10 பேர் மந்திரிகளாக உள்ளனர். இந்த மந்திரிசபை பதவியேற்று 3 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் 5 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.
புதிய மந்திரிகள் பட்டியலில் இடம்பெறப்போவதாக பல்வேறு எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் அடிபடுகின்றன. எனினும் இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
பகவந்த் மன் அரசு பதவியேற்றபோது 10 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இதில் சுகாதார மந்திரியாக இருந்த விஜய் சிங்லா, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த மே மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.